இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியின் தமிழ்த்துறை வரலாற்று சுற்றுலா தலங்களுக்கு இரண்டாமாண்டு வணிகவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் மாணவ மாணவியரை ஒருநாள் களப்பணிக்காக மலையடிப்பட்டி அகழ்வாய்வு தளம், கரிவலம் வந்த நல்லூர் பால் வண்ண நாதர் ஆலயம், கிருஷ்ணாபுரம் பழமையான சிற்பக்கலைக் கோவில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தளம், பொருநை அருங்காட்சியகம் ஆகிய வரலாற்று களங்களுக்கு ஒரு நாள் பயணம் அழைத்துச் சென்றனர். தொல்லியல் தளங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்கள் பற்றியும், அகழ்வாய்வு நடைபெற்ற இடங்களைப் பற்றியும் மிக விளக்கமாக வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர்.போ கந்தசாமி மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.